90வது பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுஸின் புகைப்படங்கள் ஏலம்

தினகரன்  தினகரன்
90வது பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுஸின் புகைப்படங்கள் ஏலம்

லண்டன் : உலக புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுஸின் 90வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வால்ட் டிஸ்னி உருவாக்கிய மிக்கி மவுஸ், அமெரிக்காவின் மகிழ்கலை வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பனி எனும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.  1930ம் ஆண்டில், steamboat willie என்ற குறும்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மிக்கி மவுஸ், பிற்காலத்தில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் மிக்கி மவுஸின் பிறந்த நாளை முன்னிட்டு மிக்கி மவுஸின் அறிய புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டன. உலக அளவில் பிரபலமாகி பல கோடி பேரை சிரிக்க வைத்து ரசிக்க வைத்த மிக்கி மவுஸின் 90வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொழுது வரையப்பட்ட 7 அறிய புகைப்படங்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டன. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்திய மதிப்பில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே மிக்கி மவுஸின் பிறந்தநாளையொட்டி, டிஸ்னி நிறுவனம் சார்பில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மிக்கி மவுஸின் புகைப்படங்கள், திரைப்படங்கள், அது உருவான விதம் என பலவும், இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலக்கதை