இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது

தினகரன்  தினகரன்
இந்தியா ஏ  நியூசிலாந்து ஏ முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது

மவுன்ட் மவுங்காநுயி, நவ. 20: இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளிடையே நடந்த முதல் டெஸ்ட் (4 நாள் போட்டி), எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. பே ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பிரித்வி ஷா 62, அகர்வால் 65, ஹனுமா விஹாரி 86, பார்திவ் 94, விஜய் ஷங்கர் 62, கவுதம் 47 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 458 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரூதர்போர்டு 114, கிளீவர் 53, பிரேஸ்வெல் 48, ஜேமிசன் 30 ரன் எடுத்தனர். இதையடுத்து 9 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 65 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்த நிலையில், ஆட்ட,ம் டிராவில் முடிந்தது. பிரித்வி 50, முரளி விஜய் 60, அகர்வால் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரகானே 41, ஹனுமா 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டாவது டெஸ்ட் ஹாமில்டனில் 23ம் தேதி தொடங்குகிறது.

மூலக்கதை