உலக கோப்பை ஹாக்கி ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் ஷாருக்கான், நயன்தாரா

தினகரன்  தினகரன்
உலக கோப்பை ஹாக்கி ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் ஷாருக்கான், நயன்தாரா

சென்னை : உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் ‘தீம்’ பாடல் வீடியோ இசை ஆல்பம் உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ளனர். உலக கோப்பை ஹாக்கி போட்டி வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு இசை வீடியோ ஆல்பம் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்துக்கு ‘ஜெய் ஹிந்த் இந்தியா’ என தலைப்பிட்டுள்ளார். இந்த ஆல்பத்திலிருந்து 46 விநாடிகள் ஓடும் புரோமோ வீடியோவை இப்போது ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார். அதில் ‘ஜெய் ஹிந்த் ஹிந்த் ஜெய் இந்தியா’ என ரஹ்மான் பாடல் பாடி தோன்றுகிறார். இந்த ஆல்பத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா, ஹாக்கி அணி வீரர்கள், டிரம்ஸ் சிவமணி உள்பட பலர் நடித்துள்ளனர். அவர்கள் தோன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

மூலக்கதை