கும்பமேளாவுக்காக 15 நாளுக்கு முன்பே முன் பதிவில்லா ரயில் டிக்கெட்

தினகரன்  தினகரன்
கும்பமேளாவுக்காக 15 நாளுக்கு முன்பே முன் பதிவில்லா ரயில் டிக்கெட்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் மகா கும்பமேளா அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி தொடங்கி 50 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கும்பமேளாவை முன்னிட்டு 15 நாட்களுக்கு முன்கூட்டியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்களை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.  ரயில்வேயின் டிக்கெட் ஆப்பான யூடிஎஸ் மூலமாக டிக்கெட்டை பெறலாம். ஜனவரி 11 முதல் மார்ச் வரை எப்போது வேண்டுமானாலும் முன்பதிவில்லா டிக்கெட் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூலக்கதை