மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: ஆந்திர அரசு முடிவு

தினகரன்  தினகரன்
மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: ஆந்திர அரசு முடிவு

திருமலை: மாநில அரசு அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக ரத்து செய்தார். மேலும், வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு மூலம் கட்சி தலைவர்கள் வீடுகளில் நடந்த சோதனையில், என்ன ஆதாரங்கள் கிடைத்தது போன்ற விவரங்களை தெரிவிக்காமல் மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகவும் முதலீட்டாளர்களை வரவிடாமல் தடுக்கும் வகையில் மத்திய அரசு சதி செய்து வருவதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். எனவே இதை தடுக்க மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆந்திர அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக சட்ட நிபுணர்களின் ஆலோசனை பேரில் வழக்கு தொடர்வது என முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை