கலிபோர்னியாவில் கொடூர காட்டு தீ! ஆயிரத்தை நெருங்கும் காணாமற்போனவர்களின் எண்ணிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
கலிபோர்னியாவில் கொடூர காட்டு தீ! ஆயிரத்தை நெருங்கும் காணாமற்போனவர்களின் எண்ணிக்கை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடந்த வாரம் மூண்ட காட்டு தீயால் காணாமற் போனோரின் எண்ணிக்கை 993 எனத் திருத்தப்பட்டுள்ளது.
 
முன்னதாக அந்த எண்ணிக்கை, 1,276 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆகக் கடைசி நிலவரப்படி மோசமான அந்தக் காட்டுத் தீயால் 80 பேர் மாண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தற்போது காட்டுத் தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
காணாமற்போனவர்களை மீட்பதில், அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
 
காட்டுத் தீ காரணமாக 46,000க்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
 
இந்த வாரம் அந்தப் பகுதியில் மழை பெய்யலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதால், காட்டுத் தீயைக் குறைக்க அது உதவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் அது வெள்ளம், நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளதை அதிகாரிகள் சுட்டினர்.
 
அது அப்பகுதி மக்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
 
இரண்டு நாள்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பாதிக்கப்பட்டோரையும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளையும் சந்தித்தார்.
 
காடுகளைத் தவறாக நிர்வாகம் செய்ததுதான் காட்டுத் தீச் சம்பவத்திற்கு காரணம் என்று அவர் குறைகூறினார்.  
 

மூலக்கதை