அகஸ்டா ஹெலி காப்டர் ஊழல் ; தரகரை நாடு கடத்த அனுமதி

தினமலர்  தினமலர்

துபாய்: வி.ஐ.பி.,க்களுக்கு வாங்கப்பட்ட விமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் இடைத்தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியான் மைக்கேல். இவரை துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த யுஏஇ கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஹெலிகாட்டர் தயாரிப்பு நிறுவனம் அகுஸ்டா வெஸ்ட்லேண்ட். இந்த நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு 12 வி.வி.ஐ.பி., ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்த வகையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஏஜென்ட் ஒருவருக்கு 350 கோடி ரூபாய் கமிஷன் தரப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த டீல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் போடப்பட்டு வாங்கப்பட்டது.

இதில் முக்கி நபராக கருதப்படும் தரகர் கிறிஸ்டியான் மைக்கேல் துபாயில் பதுங்கி இருந்தார். இவரை பிடிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதன் முயற்சியாக தற்போது கிறிஸ்டியான் மைக்கேலை இந்தியாவிடம் ஒப்படைக்க யுஏஇ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை