புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரை வீழ்த்தியது பெங்களூரு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரை வீழ்த்தியது பெங்களூரு

அகமதாபாத்: புரோ கபடி லீக் போட்டியில், ஜெய்ப்பூர் அணியுடனான ஆட்டத்தில் பெங்களூரு அபார வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில், உ. பி. , அணியை வீழ்த்தி குஜராத் வென்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுவரும் புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நேற்றிரவு நடைபெற்ற 70வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் துவங்கியது முதலே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.



இந்நிலையில், 45-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. இது, இந்த அணிக்கு கிடைத்த 7வது வெற்றியாகும்.

குஜராத் அணி வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் உ. பி. , மற்றும் குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில், இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

இந்நிலையில், 32-37 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான குஜராத், உ. பி. அணியை வென்றது.

இது, குஜராத் அணிக்கு கிடைத்த 8வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை