சர்வதேச ஜூனியர் பாட்மிண்டன் இந்திய வீரர் லக்சயா வெண்கலம் வென்றார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச ஜூனியர் பாட்மிண்டன் இந்திய வீரர் லக்சயா வெண்கலம் வென்றார்

மார்காம்: சர்வதேச ஜூனியர் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென், தாய்லாந்து வீரரிடம் தோல்வி அடைந்த நிலையில், அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.   சர்வதேச ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, கனடாவின் மார்காம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் 21-8, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில், மலேசிய வீரர் அய்தில் ஷோலேவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவரும்,

நடப்பு சாம்பியனுமான குன்லாவுட்டை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே இருவரும் சிறப்பாக விளையாடினர்.

இந்நிலையில், 22-20 என்ற கணக்கில் லக்சயா சென் முதல் செட்டை கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய குன்லவுட் 16-12, 13-21 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 11 நிமிடம் நீடித்தது. இப்போட்டியில் தோல்வி அடைந்தாலும், அரையிறுதி வரை முன்னேறிய லக்சயா சென்னுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

சர்வதேச ஜூனியர் பாட்மிண்டனில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா மட்டுமே கடந்த 2008ல் தங்கம் வென்றிருந்தார்.

ஆடவர் பிரிவில் தற்போது லக்சயா சென் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை