மீண்டும் ஆட்சியமைக்க சந்திரசேகரராவ் சிறப்பு யாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீண்டும் ஆட்சியமைக்க சந்திரசேகரராவ் சிறப்பு யாகம்

திருமலை: தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ். அம்மாநிலத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் விதமாக தனது அமைச்சரவையை கலைத்தார்.

இதையடுத்து அங்கு இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். இந்நிலையில் தெலங்கானாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.

பிரசாரமும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் கேஜ்வேல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக முதல்வர் சந்திரசேகரராவ் அத்தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் தங்களது கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக சந்திரசேகர்ராவ் ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் 2 நாள் சிறப்பு யாகத்தை நேற்று தொடங்கினார்.

விசாகப்பட்டினம் சாரதா பீட பீடாதிபதி சொரூபானந்த சுவாமி தலைமையில் தொடங்கிய இந்த யாகத்தில், 75 ரூத்விக்குகள் பங்கேற்று நடத்தி வருகின்றனர். இதில் சூரிய நமஸ்காரம், நவக்கிரக யாகம், சண்டியாகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த யாகத்தில் சந்திரசேகர் ராவ், அவரது மனைவி ஷோபா மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

.

மூலக்கதை