சந்திரபாபு நாயுடு-மம்தா இன்று சந்திப்பு: பாஜவுக்கு எதிரான கூட்டணி குறித்து ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சந்திரபாபு நாயுடுமம்தா இன்று சந்திப்பு: பாஜவுக்கு எதிரான கூட்டணி குறித்து ஆலோசனை

கொல்கத்தா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி நிறுவன தலைவர் முலாயம் சிங்  ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். அப்போது, பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.

பாஜவை கடுமையாக எதிர்த்து வருபவர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வருகிற ஜனவரி மாதம் கொல்கத்தாவில் மிகப்பிரமாண்ட பேரணியை நடத்தப்போவதாகவும், பேரணியில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்போவதாகவும் ஏற்கனவே மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

.

மூலக்கதை