கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரிப்பு

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1276 ஆக உயர்ந்துள்ளது. மீட்டுப்பணிகள் இன்னும் முடிவடையாததால் உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. கலிபோனியாவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்களை அதிபர் டிரம்ப் நேரில் பார்வையிட்டார். காட்டுத்தீயால் மோசமான பாதிப்பை சந்தித்த பாரடைஸ் நகர மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்பு பேசிய அவர் உயிரிழப்பு எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என்றும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே முதல் கடமை என்றும் கூறினார். இந்த காட்டுத்தீயானது அமெரிக்க நாட்டில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படுகிறது. மேலும் கலிபோர்னியாவில் 233 சதுர மைல் முழுவதும் பரவிய காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 10,000 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை