விழுந்த மின்கம்பங்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைப்பதே அரசின் முதல் பணி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தினகரன்  தினகரன்
விழுந்த மின்கம்பங்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைப்பதே அரசின் முதல் பணி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேரிடர் நேரத்தில் விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்; மீட்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுவதால் அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சோர்வு ஏற்படும் என கூறியுள்ளார். மேலும், குக்கிராமங்களிலும் கூட மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; 100% முழுமையாக நிறைவேற்ற, அரசுக்கு அவகாசம் தேவை. விழுந்த மின்கம்பங்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைப்பதே அரசின் முதல் பணி என கூறியுள்ளார்.

மூலக்கதை