நியூசிலாந்து பெண்கள் ஆறுதல் வெற்றி | நவம்பர் 16, 2018

தினமலர்  தினமலர்
நியூசிலாந்து பெண்கள் ஆறுதல் வெற்றி | நவம்பர் 16, 2018

 கயானா: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து பெண்கள் அணி, 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீசில் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை இழந்த நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. 

நியூசிலாந்து அணிக்கு சுஜீ பேட்ஸ் (35), டிவைன் (32) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் சாட்டர்வொயிட் 26 ரன்கள் எடுக்க, மார்டின் 29 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிளறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஜவேரியா, 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். நிதா தர் 11, அலியா 12 ரன்கள் எடுத்தனர். மற்ற யாரும் பெரியளவில் ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 90 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் 3ல் தோற்ற பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது.

மூலக்கதை