டுபிளசி ஓய்வு எப்போது | நவம்பர் 16, 2018

தினமலர்  தினமலர்
டுபிளசி ஓய்வு எப்போது | நவம்பர் 16, 2018

பிரிஸ்பேன்: ‘‘வரும் 2020ல் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரை விளையாட திட்டமிட்டுள்ளேன்,’’ என, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டுபிளசி, 34. இவர், இதுவரை 54 டெஸ்ட் (3302 ரன்கள்), 124 ஒருநாள் (4693), 41 சர்வதேச ‘டுவென்டி–20’ (1237) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2014, 2016ல் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய இவர், வரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரை விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுபிளசி கூறுகையில், ‘‘வரும் 2020ல் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் எனக்கு கடைசி தொடராக இருக்கும் என நம்புகிறேன்,’’ என்றார்.

மூலக்கதை