இந்திய பவுலர்கள் ஏமாற்றம் | நவம்பர் 17, 2018

தினமலர்  தினமலர்
இந்திய பவுலர்கள் ஏமாற்றம் | நவம்பர் 17, 2018

மவுன்ட் மவுன்கனுய்: நியூசிலாந்து மண்ணில் இந்தியா ‘ஏ’, நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் அதிகாரப்பூர்வமற்ற 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மவுன்ட் மவுன்கனுயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்திருந்தது. பார்த்திவ் படேல் (79) அவுட்டாகாமல் இருந்தார்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. பார்த்திவ் (94) சத வாய்ப்பை இழந்தார். விஜய் ஷங்கர் (62) அரை சதம் கடந்தார். கவுதம் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 467 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கிளைன் பிலிப்ஸ் (13) ஏமாற்றினார். ஹாமிஷ் ரூதர்போர்டு, கேப்டன் வில் யங் ஜோடி அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தபோது, யங் (49) ஆட்டமிழந்தார். ரூதர்போர்டு சதம் கடந்தார். ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. ரூதர்போர்டு (106) அவுட்டாகாமல் இருந்தார். முகமது சிராஜ், சகார் இருந்தும் விக்கெட் வீழ்த்தவில்லை.

மூலக்கதை