இங்கிலாந்து வீராங்கனை ‘ஹாட்ரிக்’ | நவம்பர் 17, 2018

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து வீராங்கனை ‘ஹாட்ரிக்’ | நவம்பர் 17, 2018

செயின்ட் லுாசியா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பெண்கள் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இங்கிலாந்தின் அன்யா ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

தென் ஆப்ரிக்க அணிக்கு ‘வேகங்கள்’ தொல்லை தந்தனர். நடாலியா பந்தில் லிசிலே (12) சிக்கினார். லாரா (4), மரிசானே (9) ஒற்றை இலக்கில் திரும்பினார். கடைசி ஓவரை வீசிய அன்யா மிரட்டினார். இவரது ‘வேகத்தில்’ ஷாப்னிம் (1), மசபட்டா (0), போரி (4) சிக்க, அன்யா ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தினார். முடிவில், தென் ஆப்ரிக்க அணி 85 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக நடாலியா, அன்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கு

எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு நடாலியா (2) ஒற்றை இலக்கில் திரும்பினார். டேனியல்லா (27), பியாமன்ட் (24) ஓரளவு கைகொடுத்தனர். முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஹெதர் நைட் (14), எமி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

2

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீராங்கனையானார் அன்யா. இதற்கு முன், 2013ல் பிரிட்ஜ்டவுனில் நடந்த போட்டியில் (எதிர்– நியூசி.,) நடாலியா ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

 

மூலக்கதை