பாகிஸ்தான் அமெரிக்காவுக்காக பொய்யையும், ஏமாற்றத்தையும் தவிர வேறு ஒன்றையும் தரவில்லை: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் அமெரிக்காவுக்காக பொய்யையும், ஏமாற்றத்தையும் தவிர வேறு ஒன்றையும் தரவில்லை: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா: அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்க அரசு கொடுக்க மறுத்தது. இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின் லேடன் பாகிஸ்தானில் இருந்த போதும் அந்நாட்டிற்கு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். பாகிஸ்தானை தாங்கள் ஆதரித்து வந்ததாகவேக் கூறிய டிரம்ப், ஆனால் பாகிஸ்தான் தங்களுக்காக சிறிய விஷயத்தைக் கூட செய்யாததால் நிதி உதவி நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அமெரிக்காவின் பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொண்டு பொய்கள் மற்றும் ஏமாற்றத்தையே தந்ததாக பாகிஸ்தான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக குற்றம் சாடியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் அடைக்கலமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். “கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டொலர்களுக்கு அதிக தொகையை கொடுத்த போதும் எமது தலைவர்கள் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் எமக்கு பொய்யையும், ஏமாற்றத்தையும் தவிர வேறு ஒன்றையும் தரவில்லை” என்று டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்தார்.

மூலக்கதை