சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் 80 பேர் கைது... அதனை கண்டித்து பல இடங்களில் போராட்டம்

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் 80 பேர் கைது... அதனை கண்டித்து பல இடங்களில் போராட்டம்

சபரிமலை : சபரிமலையில் நள்ளிரவு 80 பக்தர்கள் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் சன்னிதானத்தில் இருந்து அவர்களை வெளியேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கலாம் என சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 18-ம் படிக்கு அருகே நடைபந்தல் பகுதியில் பக்தர்கள் சிலர் தங்க முயன்றுள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை வெளியேறும்படி அறிவுறுத்தினர். போலீசாரின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் அனைவரையும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனை அடுத்து பக்தர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாஜகவினர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் கேரளவில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை