கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்தியகுழு தமிழகத்திற்கு வரவேண்டும்: முத்தரசன் பேட்டி

தினகரன்  தினகரன்
கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்தியகுழு தமிழகத்திற்கு வரவேண்டும்: முத்தரசன் பேட்டி

புதுக்கோட்டை: கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்தியகுழு தமிழகத்திற்கு வரவேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், இயற்கை பேரிடர் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து அதிக நிதியை பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலைமை சீராகும் வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சில அமைச்சர்கள் அளிக்கும் தவறான தகவல்களால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், தற்போதைய சூழ்நிலையில் 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பழனிசாமி பேசுவது சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை