கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம் : பென்னிகுக் தொண்டு நிறுவனம்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம் : பென்னிகுக் தொண்டு நிறுவனம்

லண்டன் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கின் பேத்தியான டயானாஜிப் தெரிவித்துள்ளார். கஜா புயலால், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பென்னிகுக்கின் அண்ணன் வழிப் பேத்தியான டயானாஜிப், வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கஜா புயலால் நிலை குலைந்துள்ள தமிழக மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பென்னிகுக் தொண்டு நிறுவனம் சார்பில் உதவிகள் செய்ய தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை குறித்து தகவல்களை கேட்டறிந்ததாகவும், பல மக்கள் உடைமைகளையும், உயிர்களை இழந்து விவசாயிகள் பயிர்கள் சேதம் குறித்த தகவல்கள் மிகுந்த கவலையடைய செய்தது என்று அவர் கூறியுள்ளார். கேரள வெள்ள பாதிப்பின்போது பென்னிகுக் தொண்டு நிறுவனம் சார்பில் உதவிகள் வழங்கினோம், தற்போது தமிழகத்திற்கு உதவ வேண்டிய நேரமாகும். புயலால் பாதிக்கப்பட்ட உதவிகள் தேவைப்படுபவர்கள் பென்னிகுக் தொண்டு நிறுவன முகநூல் பக்கத்தில் தகவல்களை அனுப்பலாம் என்றும், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை