நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்.,: அமித் ஷா

தினமலர்  தினமலர்
நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்.,: அமித் ஷா

புதுடில்லி : காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி என்பதைவிட நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: பிரதமர் மோடியின் சவாலால் காங்., தலைவர்கள் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 1978ம் ஆண்டிலிருந்து காங்., தலைவர்களாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தான் இருந்துள்ளனர். இதன்மூலம் ஒரு குடும்ப நிறுவனமாக காங்., மாறியுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறி, ஒரு பரம்பரைக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கமே அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

நேரு குடும்பத்தை சேராத காங்., தலைவர்களுக்கு அவமரியாதையே உண்டாகியுள்ளது. நரசிம்மராவ், சீதாராம் கேசரி, தேபர், பாபு ஜகஜீவன் ராம், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற அக்கட்சியின் தலைவர்களுக்கு ஒரு குடும்பத்தினரால் அவமதிப்புக்கு ஆளாகினர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை