சிரியாவில் 43 பேர் பலி

தினமலர்  தினமலர்
சிரியாவில் 43 பேர் பலி

டெயிர்எஸார்: அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியாவில் நவ.,17 நடத்திய வான்வழித் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களில், பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஈராக்கையொட்டிய சிரியாவின் டெயிர் எஸார் மாநிலத்தில், அமெரிக்க கூட்டுப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் 36 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் சிறுவர்கள். மேலும், அந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பொதுமக்களா அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளா என்ற விவரம் தெரியவில்லை. ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்துப் படையினர் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படையினரின் கூட்டணி தாக்குதல் தொடங்கியதற்குப் பிறகு, அமெரிக்கத் தாக்குதலில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

மூலக்கதை