'ஸ்மார்ட் போன்'களுக்கு அடிமையான மாணவர்கள்

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையான மாணவர்கள்

வாஷிங்டன் : கல்லுாரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 'பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை; 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதை விட முடியாது' என, அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில், கல்லுாரி மாணவர் - மாணவியரிடம் நடந்த ஆய்வு முடிவுகள், 'ஜர்னல் அடிக்டிவ் பிஹேவியர்' என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து, அமெரிக்காவில் பபல்லோ நகர பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானி, ஸாரா ஓடானல் கூறியதாவது: கல்லுாரி மாணவர்களிடம், ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்காக, உணவு, பணம் என, எதையும் விட்டுத் தரும் மன நிலையில், மாணவர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு வேலையை முடித்தால், உணவு வழங்கப்படும் அல்லது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த அனுமதி தரப்படும் என்ற நிபந்தனை விதித்தால், அந்த வேலையை முடித்து விட்டு, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கே, மாணவர்கள் விரும்புவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை