குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று... குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம்

தினமலர்  தினமலர்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று... குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம்

குழந்தைகள் நாட்டின் செல்வங்கள். ஆனால் சில நேரங்களில் குழந்தைகள் உறவினர்கள், நண்பர்கள், வீடு, பள்ளி என பல இடங்களில் அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர். இவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அனைவரது கடமை. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ., 19ம் தேதி, உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குழந்தைகளை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், வார்த்கைளாலோ அல்லது உணர்வுகளை பாதிக்கும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்வது ஆகியவை அவர்கள் மீதான வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது. தவிர குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, சிசுக்கொலை ஆகியவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். குழுந்தைகளும் தெய்வமும் ஒன்று என்பதை புரிந்து கொண்டால், தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை.
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்தபாடில்லை. தமிழகத்திலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கு கடுமையான தண்.டனை வழங்கப்பட்டால் தான், குற்றங்கள் ஒழியும். குழந்தை திருமணங்கள், சிசுக்கொலை, குழந்தை தொழிலாளர் முறை போன்ற குற்றங்களுக்கு பெரும்பாலும் பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர். அறியாமையும், வறுமையுமே இதற்கு காரணம்.

எது நல்ல தொடுதல்



தங்களிடம் தவறாக நடந்து கொள்ளும் நபர்களை குழந்தைகள் சரியாக அடையாளம் கண்டு கொண்டாலும், பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. பயம் காரணமாக அவற்றை யாரிடமும் கூறுவதில்லை. குழந்தைகளுக்கு எது நல்ல தொடுதல், எது தவறானது என்பது குறித்து பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். தற்காப்பு விஷயங்களையும் கற்றுத்தர வேண்டும்.

100 கோடி



உலகளவில் கடந்தாண்டு,2 - 17 வயதுக்குட்பட்ட 100 கோடி குழந்தைகள், பாலியல் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை