இந்தியர் சுட்டுக் கொலை

தினமலர்  தினமலர்
இந்தியர் சுட்டுக் கொலை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த இந்தியர், 16 வயது சிறுவனால், சுட்டுக் கொல்லப்பட்டார்.தெலுங்கானா மாநிலம், மேடக் பகுதியைச் சேர்ந்தவர், சுனில் எட்லா, 61. இவர், 1987 முதல், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள, வென்ட்னார் சிட்டி என்ற இடத்தில் வசித்து வந்தார். அங்குள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், 15ல், இரவுப் பணிக்கு செல்வதற்காக, சுனில் எட்லா, தன் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, 16, வயது சிறுவன், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவரது காரை திருடிச் சென்றான்.இதில், சம்பவ இடத்திலேயே, சுனில் பரிதாபமாக உயிர் இழந்தார்.நியூ ஜெர்சியில் உள்ள வேறொரு பகுதியில், காரை மீட்ட போலீசார், அந்த சிறுவனை கைது செய்தனர்.சுனில் எட்லாவின் தாய், இந்தியாவில் வசிக்கிறார். அவரது, 95வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, அவர் இந்தியா வர திட்டமிட்டு இருந்ததாக, நண்பர்கள் தெரிவித்தனர்.அட்லாண்டிக் சிட்டி பகுதியில் உள்ள தேவாலயங்களில், சுனில் எட்லா, 'பியானோ' வாசித்து வந்தார்.இதனால், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு, அவர் நன்கு அறிமுகமானவராக இருந்தார். இந்நிலையில், இவரது படுகொலை, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனிடம், கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை