ஆந்திர மாநிலம் நகரியில் ரூ.4-க்கு நடமாடும் ஓய்.எஸ். அண்ணா உணவகம்: துவக்கி வைத்தார் நடிகை ரோஜா

தினகரன்  தினகரன்
ஆந்திர மாநிலம் நகரியில் ரூ.4க்கு நடமாடும் ஓய்.எஸ். அண்ணா உணவகம்: துவக்கி வைத்தார் நடிகை ரோஜா

ஐத்ராபாத்: ஆந்திர மாநிலம் நகரியில் ரூ.4-க்கு நடமாடும் ஓய்.எஸ். அண்ணா உணவகத்தை நடிகையும்,நகரி தொகுதி எம்.எல்.ஏ வுமான ரோஜா துவக்கி வைத்தார். ஆந்திராவில் உள்ள முக்கிய எதிர்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி தலைவியும், நகரி தொகுதி எம்.எல்.ஏ வுமான நடிகை ரோஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு இதனை செயல்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரோஜா, மக்கள் நிறைந்த அனைத்து பகுதிகளிலும் நடமாடும் உணவகம் மூலம் தரமான முறையில் உணவு வழங்கப்படும் என்றார். பொதுமக்கள் அணுக ஏதுவாக நம்ம எம்.எல்.ஏ என்ற மொபைல் ஆஃப்  சேவையும் ரோஜா துவக்கிவைத்தார். 4 ரூபாய்க்கு நடமாடும் ஓய்.எஸ். உணவகம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை