'பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்

தினமலர்  தினமலர்
பென்ஷன் மோசடி : 22 பெண்கள் சிக்கினர்

சீதாபூர்: உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில், கணவன் உயிருடன் இருக்கும் போதே, 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்' பெற்றது தெரிய வந்துள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய், 'பென்ஷன்' வழங்கப்படுகிறது. கணவன் உயிருடன் இருக்கும் பெண்களும், விதவை, 'பென்ஷன்' பெறுவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, விதவை, 'பென்ஷன்' பெறும் பெண்ணின் கணவர் சந்தீப் குமார் என்பவர் கூறியதாவது: சமீபத்தில் என் மனைவியின் வங்கி கணக்கில், 3,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக, மொபைல் எண்ணுக்கு வங்கியில் இருந்து, குறுந்தகவல் வந்தது. இது குறித்து வங்கியில் விசாரித்த போது, என் மனைவி விதவை, 'பென்ஷன்' வாங்குவதாக கூறினர். இதுபோல் பல பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும் போதே விதவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்தது.இது குறித்து மாவட்ட தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

புகாரையடுத்து நடந்த ஆய்வில், 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தலைமை அதிகாரியும், கலெக்டரும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை