சபரிமலையில் இந்து இயக்க நிர்வாகிகள் கைதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்: தமிழக பஸ்கள் கேரள எல்லையில் நிறுத்தம்

தினகரன்  தினகரன்
சபரிமலையில் இந்து இயக்க நிர்வாகிகள் கைதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்: தமிழக பஸ்கள் கேரள எல்லையில் நிறுத்தம்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்ற இந்து ஐக்கியவேதி பொது செயலாளர் சசிகலா மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. கனமழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஐப்பசி மாத பூஜை, சித்திரை ஆட்டத்திருநாள்  பூஜையில் வன்முறை வெடித்ததால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ேபாடப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்து ஐக்கியவேதி பொது செயலாளர் சசிகலா சபரிமலை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு இருமுடி கட்டுடன் மரக்கூட்டம் பகுதிக்கு வந்தார். பாதுகாப்பு பிரச்னை காரணமாக நேற்று அதிகாலை 1.30 மணியளவில் போலீசார் அவரை கைது செய்தனர்.மாலை 3 மணியளவில் அரை போலீசார் திருவல்லா கோட்டாட்சியர் வினய் கோயல் முன் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் 2 நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே சசிகலா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பாஜவும் ஆதரவு அளித்தது. இதற்கிடையே நேற்று தரிசனத்துக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கேரளா முழுவதும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தமிழக பஸ்கள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டன.

மூலக்கதை