இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிய உத்தரவு: தொடர்ந்து விசாரணை நடத்த டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிய உத்தரவு: தொடர்ந்து விசாரணை நடத்த டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தைப்பெற  ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீதான    குற்றச்சாட்டுக்கு வழக்கில் முகாந்திரம் உள்ளதால் அவர்களுக்கு எதிராக  குற்றச்சாட்டுகளை பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என  குற்றவியல் போலீசாருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று அதிரடி  உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த  வழக்கில் கடந்த  ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி டிடிவி.தினகரன், ஹவாலா புரோக்கர் சுகேஷ்  சந்திரசேகர் ஆகியோரை டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார்  சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து  டிடிவி.தினகரனின் நண்பர்  மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா புரோக்கர்கள்  லலித்குமார், நரேஷ்(எ)நத்துசிங், புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம்,  நரேந்திர ஜெயின் மற்றும் பி.குமார் ஆகியோரையும் போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.டிடிவி.தினகரன் அவரது நண்பர்  மல்லிகார்ஜுனா ஆகிய இருவரையும் கடந்தாண்டு ஜூன் 1ம் தேதி டெல்லி தீஸ்ஹசாரே  மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. இதையடுத்து வழக்கில்  முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில்  விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு, டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு  நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கை  விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்’’  என வாதிட்டார். இதற்கு குற்றவியல் போலீசார் தரப்பில் கடும் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  குற்றப்பத்திரிக்கை மீதான உத்தரவு மதியம் பிறப்பிக்கப்படும் என  அறிவித்தார்.பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி அருண் பரத்வாஜ் பிறப்பித்த  உத்தரவில், “வழக்கில் டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா,  பி.குமார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான முகாந்திரம்  உள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்து போலீசார்  தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதைத்தவிர டிசம்பர் 4ம் தேதி  டிடிவி.தினகரன் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.  அடுத்த மாதம் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை வழக்கின் சாட்சிகள் மீதான  அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.மேலும், இந்த வழக்கில்  இருந்து ஹவாலா புரோக்கர்கள் நத்துசிங், லலித்குமார், குல்பித் குந்த்ரா,  ஜெய் விக்ரம், நரேந்திர ஜெயின் உள்பட 5 பேரை விடுவிடுவிப்பதாகவும், முக்கிய  குற்றவாளியான சுகேஷ் சந்திர சேகரின் நீதிமன்ற காவலை அடுத்த விசாரணை வரை  நீட்டிப்பதாகவும் நேற்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மனு தள்ளுபடிஇதில் மேற்கண்ட வழக்கின் குற்றச்சாட்டில் எந்த வித முகாந்திரமும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்து வழக்கில் இருந்து தம்மை முழுமையாக  விடுவிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்  புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை பரிசீலனை செய்த  நீதிமன்றம் குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்கில்  இருந்து விடுவிக்க முடியாது எனக்கூறி டிடிவி.தினகரன் தாக்கல் செய்திருந்த  மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மூலக்கதை