அமெரிக்க நிறுவனங்களில் இந்திய இன்ஜினியர்களுக்கு மவுசு

தினகரன்  தினகரன்
அமெரிக்க நிறுவனங்களில் இந்திய இன்ஜினியர்களுக்கு மவுசு

பெங்களூர்: அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய இன்ஜினியர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்தியாவில்  குவியும் பன்னாட்டு நிறுவனங்களில் 60 சதவீதம் அமெரிக்காவை சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் கிடைத்த தகவல்கள்: இந்தியாவில் கடந்தாண்டு 943 பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாயின. அவற்றில் 50 சதவீதத்துக்கு மேல் அமெரிக்க சாப்ட்வேர் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை 976 ஆக உயர்ந்துள்ளது. இப்போது அமெரிக்க நிறுவனங்கள் எண்ணிக்கை 10 சதவீதம்  அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப, சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு முக்கிய தேவை இன்ஜினியர்கள், தொழில்நுட்ப தகுதி உள்ள இளைஞர்கள் தான். போதுமான தகுதி, திறமையுடன் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் கிடைப்பது இந்தியாவில் மட்டும்  தான் என்பதை அமெரிக்க நிறுவனங்கள் ஒப்புக்கொள்கின்றன. இந்தியாவில் இந்த  பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்தாண்டு 3,43,000 ஆக இருந்தது. இப்போது 3,96,000 ஆக உயர்ந்துள்ளது.  இந்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து 4,35,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை