ஜெட்லி புது விளக்கம் பணமதிப்பிழப்பால் குவிந்த வரி வருவாய்

தினகரன்  தினகரன்
ஜெட்லி புது விளக்கம் பணமதிப்பிழப்பால் குவிந்த வரி வருவாய்

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பதே அரசியல் சார்ந்த விஷயம் அல்ல; நிதி  விஷயங்களில் நன்னெறிப்படுத்தும் நடவடிக்கை. இப்படி 2 ஆண்டுக்கு பின் ஒரு  விளக்கம் தந்திருப்பவர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.  பணமதிப்பிழப்பு விவகாரத்தை வைத்து  தான் 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் மோடி - ராகுல் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பாஜ தேர்தல் அறிக்கையை வெளியிட்ட  பின் நிருபர்களிடம் பேசிய ஜெட்லி கூறியதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை   என்பதே நாட்டை, நாட்டு மக்களை நன்னெறிப்படுத்துவது தான். இந்த விஷயத்தை  தேவையில்லாமல் அரசியல் ஆக்கி விட்டனர். கருப்பு பணத்திலும், தவறான  போக்கையும் கொண்டுள்ள நிலையை மாற்றி அமைக்கவே இந்த நடவடிக்கையை பிரதமர்  மோடி கொண்டு வந்தார். இது ஒரு நன்னெறிப்படுத்தும் நிகழ்வு என்பதால்  தான்  அதன் பலன்களை இப்போது அரசு கண்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு  நடவடிக்கைக்கு பின், வருமான வரி கட்டுவோர் அதிகரித்துள்ளனர். முறையான  விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. வருமான வரி  செலுத்துவோர் அதிகரித்துள்ளதால், அரசுக்கு வரி வருவாய் உயர்ந்துள்ளது.  மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் பங்கு அதிகரித்துள்ளது. இதுபோல, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், வங்கிகளில் குவிந்த உரிமை கோரா  கருப்பு பணம் மூலம் கிடைத்த அபராத வரி வருவாய், ஏழை மக்கள் நலத்திட்டங்களை  செயல்படுத்துகிறோம். இவ்வாறு ஜெட்லி  கூறினார்.

மூலக்கதை