டென்மார்க்கில் கருத்தரங்கக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
டென்மார்க்கில் கருத்தரங்கக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு

டென்மார்க் நாட்டில், இஸ்லாம் மதம் தொடர்பான கருத்தரங்கக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. கோபன்கேஹன் நகரில் நடைபெற்ற அந்த கருத்தரங்கில், இஸ்லாம் மதம் குறித்த சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை வரைந்த கார்டூனிஸ்ட் பங்கேற்றிருந்தார். அப்போது காரில் வந்த சிலர், கருத்தரங்க அறை மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காவல்துறையினர் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என கண்டித்துள்ள டென்மார்க் பிரதமர், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இஸ்லாம் மதம் தொடர்பான கேலிச்சித்திரங்களை வெளியிட்டதற்காக அண்மையில் பாரீஸைச் சேர்ந்த பத்திரிகை இதழ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை