ஒரு தேர்வுக்காக நாடே அமைதியாக இருக்குமாம்... காரணம் என்ன?

PARIS TAMIL  PARIS TAMIL
ஒரு தேர்வுக்காக நாடே அமைதியாக இருக்குமாம்... காரணம் என்ன?

தென்கொரியாவில் கடந்த வியாழக்கிழமை அலுவலகங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டன.
 
134 விமானங்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது.
 
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்...
 
ஏன்?
 
காரணம், அன்று அந்நாட்டின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு.
 
தென்கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின்போது மாணவர்கள் கவனச்சிதறலால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடுகள் இடம்பெறும்.
 
தேர்வில் பல ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்வது வழக்கம்.
 
இந்த ஆண்டு தேர்வைக் கிட்டத்தட்ட 595,000 மாணவர்கள் எழுதினர்.
தென்கொரியப் பல்கலைக் கழகங்களில் படிக்க எப்போதுமே கடும் போட்டி நிலவும். 
 
நல்ல பல்கலைக்கழகத்தில் சேர்வதை ஒரு சமூக அந்தஸ்தாக அங்குள்ள மக்கள் பார்க்கின்றனர். 
 
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென வாழ்த்தி, பொது இடங்களில் விளம்பரங்களும் ஆலோசனைகளும்
இடம்பெற்றிருந்தன.
 
சரியான நேரத்திற்கு மாணவர்கள் தேர்வுக்குச் செல்லவேண்டும் என்பதால் போக்குவரத்தைக் குறைக்கும் நோக்கில் அன்று அலுவலகங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டன.
 
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் மாணவர்களைத் தேர்வுநிலையங்களுக்கு ஏற்றிச்செல்ல சிறப்பு வாகனங்கள் காத்திருந்தன. 
 
விமானங்கள் அன்று 10,000 அடிக்கு மேல் தான் பறக்கவேண்டும்.
 

மூலக்கதை