கஷோக்கி கொலை விவகாரத்தில் விரைவில் முடிவு: அதிபர் டிரம்ப்

தினமலர்  தினமலர்
கஷோக்கி கொலை விவகாரத்தில் விரைவில் முடிவு: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: துருக்கியில் பத்திரிகையாளர் கஷோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் அமெரிக்கா இறுதி முடிவெடுக்கப்பட உள்ளதாக, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஒப்புதல்

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி(59). சவுதி பட்டத்து இளவரசர் மற்றும் மன்னராட்சி குறித்து விமர்சித்து எழுதி வந்தார். சில நாட்களுக்கு முன் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற கசோக்கி மாயமானார். அவர் கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால், இதனை சவுதி மறுத்து வந்தது. பின்னர் கசோக்கி கொலை செய்யப்பட்டு விட்டதை சவுதி அரசு ஒப்பு கொண்டதுடன், இது குறித்து 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்திருந்தது.

ஆலோசனை

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், கசோக்கி கொலை குறித்து முழு அறிக்கை ஓரிரு நாளில் கிடைத்து விடும். அனேகமாக திங்கள் அல்லது செவ்வாய்கிழமை கிடைத்து விடும். இதன் பிறகு இறுதி முடிவெடுக்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியில் சவுதி உண்மையான நட்பு நாடாக உள்ளது. நான் அதிபர் என்பதால், ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை