ஜனவரி மாதத்தில் சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்... இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

தினகரன்  தினகரன்
ஜனவரி மாதத்தில் சந்திராயன்2 திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்... இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சென்னை: சந்திராயன்-2 திட்டத்தை வரும் ஜனவரி மாதத்தில் செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதே போன்று அடுத்தடுத்து விண்வெளித் திட்டங்கள் உள்ளன என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். அடுத்து வருகிற டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜிசாட்-11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரோ உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோள் தயாரித்து ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை