தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை விடுவிக்க மறுப்பு... சிபிஐ குற்றப்பத்திரிக்கை ஏற்பு

தினகரன்  தினகரன்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை விடுவிக்க மறுப்பு... சிபிஐ குற்றப்பத்திரிக்கை ஏற்பு

டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.  குற்றப்பத்திரிக்கை ஏற்கப்பட்டதால் டிடிவி தினகரன் மீது டிசம்பர் 10-ல் குற்றச்சாட்டை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் மீதான குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் டிடிவி தினகரன் மீதான குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரன் மீதான வழக்கு விவரம்: அதிமுக உடைந்த போது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டது. டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் என்பவர் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைதானார்கள். மேலும் இடைத்தரகர் சுகேஷிடம் இருந்து ரூ.1.3 கோடி பணத்தையும் சிபிஐ பறிமுதல் செய்தது. டிடிவி தினகரன் சிக்கியது எப்படி?:இடைத்தரகர் சுகேஷ் உள்ளிட்டோரின் செல்போனை இடைமறித்துக்கேட்ட சிபிஐ-க்கு துப்புகிடைத்தது. செல்போன் உரையாடலை ஆதாரமாக வைத்து முதலில் சுகேஷ் கைது செய்யப்பட்டார். பிறகு சுகேஷ் கொடுத்த தகவலின் பேரில் டிடிவி தினகரனையும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 40 நாட்கள் திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இடைத்தரகர் சுகேஷ் கடந்த 19 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரன் உறுதி: வழக்கை தொடர்ந்து நடத்தி இது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் உறுதியாக கூறியுள்ளார். டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் சிலர் செய்த சதியால் தம்மீது வழக்கு போடப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் விளக்கம அளித்துள்ளார்.

மூலக்கதை