ரூதர்போர்டு சதம் நியூசிலாந்து பதிலடி

தினகரன்  தினகரன்
ரூதர்போர்டு சதம் நியூசிலாந்து பதிலடி

மவுன்ட் மவுங்காநுயி: இந்தியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்துள்ளது. பே ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்திருந்தது. விஜய் 28, பிரித்வி ஷா 62, அகர்வால் 65, ஹனுமா விஹாரி 86  ரன் விளாசி ஆட்டமிழந்தனர். பார்திவ் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். நேற்று நடந்த 2ம் நாள் ஆட்டத்தில், இந்தியா ஏ 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. பார்திவ் 94, விஜய் ஷங்கர் 62, கவுதம் 47 ரன் விளாசினர். சாஹர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்துள்ளது. கேப்டன் வில் யங் 49 ரன் எடுத்து வெளியேறினார். ரீதர்போர்டு 106 ரன், டிம் செய்பர்ட் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க நியூசி. ஏ அணி இன்னும் 291 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை