பரபரப்பான கட்டத்தில் பல்லெகெலே டெஸ்ட்

தினகரன்  தினகரன்
பரபரப்பான கட்டத்தில் பல்லெகெலே டெஸ்ட்

கண்டி: இலங்கை - இங்கிலாந்து அணிகளிடையேயான 2வது டெஸ்டில், வெற்றியை தீர்மானிக்கும் பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 285 ரன்னும், இலங்கை அணி 336 ரன்னும் குவித்தன. இதையடுத்து, 46 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 301 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 65.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்துள்ளது. கருணரத்னே 57, மேத்யூஸ் 88, ரோஷன் சில்வா 37 ரன் எடுத்தனர். டிக்வெல்லா 27 ரன்னுடன் களத்தில் உள்ளார். கை வசம் 3 விக்கெட் இருக்க, இலங்கை அணி வெற்றிக்கு இன்னும் 75 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை