ஆஸ்திரேலியாவுடன் டி10 தென் ஆப்ரிக்கா வெற்றி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவுடன் டி10 தென் ஆப்ரிக்கா வெற்றி

குயின்ஸ்லேண்ட்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டி10 போட்டியில், தென் ஆப்ரிக்கா 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. கராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டி கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கியதால் தலா 10 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 10 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன் குவித்தது. டி காக் 22, ஹெண்ட்ரிக்ஸ் 19, கேப்டன் டு பிளெஸ்ஸி 27, கிளாசன் 12, மில்லர் 11 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன் மட்டுமே எடுத்து 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. லின் 14, மேக்ஸ்வெல் 38 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 2 ஓவரில் 12 ரன்னுக்கு 1 விக்கெட் வீழ்த்திய ஷம்சி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை