மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

தினகரன்  தினகரன்
மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

மாலே: மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். சார்க் நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிக் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்காமல் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து வந்தார். சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக தனது தோல்வியை யாமீன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாலத்தீவு புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிக் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் மாலேவில் நடந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று மோடி மாலத்தீவு சென்றார். அவருக்கு சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பிற நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.

மூலக்கதை