பாஜ தனது பெரும்பான்மையை நிரூபிக்க கோவா சட்டப்பேரவை சிறப்பு: கூட்டத்தை கூட்ட வேண்டும்: ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை

தினகரன்  தினகரன்
பாஜ தனது பெரும்பான்மையை நிரூபிக்க கோவா சட்டப்பேரவை சிறப்பு: கூட்டத்தை கூட்ட வேண்டும்: ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை

பனாஜி: கோவாவில் பாஜ தலைமையிலான கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹா கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கோவா தலைநகர் பனாஜியில் நேற்று அளித்த பேட்டி:கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிப்பு காரணமாக அடிக்கடி சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார். இதனால், கோவா அரசில் ஒழுங்கற்ற நிலை காணப்படுகிறது. 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவு காங்கிரசிடம் உள்ளதாக ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். மத்தியில் உள்ள பாஜ அரசும், கோவா ஆளுநரும் மக்கள் மீது மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமும் காங்கிரஸ் எழுப்பும். பெரும்பான்மையை நிருபிக்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்ட வலியுறுத்துவோம் என்றார்.இதற்கிடையே, கோவாவில் பா.ஜ கூட்டணி கட்சியான எம்ஜிபி, பாரிக்கர் உடல்நிலையை சுட்டிக்காட்டி முதல்வர் பொறுப்பை தங்கள் கட்சியின் அமைச்சர் சுதின் தவாலிகர்க்கு வழங்கக் கோரி போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

மூலக்கதை