உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

 

அதிபர் பெட்ரோ போரோசென்கோ தொலைக்காட்சி வாயிலாக, சண்டையை நிறுத்துமாறு ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளார். இதனை அடுத்து சண்டை நிறுத்தப்பட்டு டோனெட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் அமைதி ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரங்களில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் முன்னிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே உக்ரைன் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துவோம் என கிளர்ச்சியாளர்கள் தரப்பு அறிவித்துள்ளது.

மூலக்கதை