புயல் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புயல் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு

திருவாரூர்: நாகை மாவட்டத்தில் நேற்று சுவர் இடிந்து ஒருவர் பலியானார். இன்று காலை கோடியக்காடு மேலவீதி வடுகநாதன்(65), திருக்குவளை அருகே மேலவாளக்கரையை சேர்ந்த வீராச்சாமி மனைவி கிளியம்மாள் (75), தொழுதூரை சேர்ந்த பாலமுருகன் மகன் சந்திரமோகன் (20), சித்தாய்மூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (63), திருக்குவளை தாலுகா அருந்தவபுலத்தை சேர்ந்த மைக்கேல் மனைவி மேரிமைக்கேல்(50) ஆகிய 5பேர் பலியாயினர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 5பேர் பலியாயினர். இரவு முதல் இன்று வரை திருத்துறைப்பூண்டி தாலுகா குரும்பால் ரயிலடி தெருவை சேர்ந்த செல்லப்பன் மகன் சிவசக்தி(6) சுவர் இடிந்தும், குடவாசல் அருகே மூலங்குடி ராமகிருஷ்ணன்(72) வீடு அருகே மரம் விழுந்த அதிர்ச்சியிலும் உயிரிழந்தார்.

பரவாக்கோட்டையில் நகுலன்(70), லட்சுமி(80), 47 தென்பாதி பாக்கியம்(63), சோமசேகரபுரம் சாராதாம்பாள்(65), தலையாமங்கலம் பானுமதி(45), வடுவூர் சிறுவன் கணேசா(9), திருத்துறைப்பூண்டி பகுதியில் பாமணி நாகராஜன், முணாக்காடு சாலாட்சி, கொத்தமங்கலம் சின்னப்பிள்ளை(67), மணலி சீனியம்மாள்(75), மேல கொருக்கை முருகையன்(63), உதயமார்த்தாண்டபுரம் ராமய்யன்(46), பின்னத்தூர் கமலாம்பாள்(60) ஆகியோர் பலியாயினர்.

அடியக்கமங்கலம் மேட்டுத்தெருவில் சுவர் இடிந்து கூலிதொழிலாளி முருகேசனின் மனைவி லதா(43) பலியானார்.   கஜா புயலின் தாக்கம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை பலி 19 ஆனது. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சிவக்கொல்லையில் சுவர் இடிந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 உள்பட 10 பேர் பலியாகினர்.

இன்று பலி எண்ணிக்கை 18 ஆனது. புதுக்கோட்டையில் நேற்று கஜா புயல் தாக்கத்தால் வீட்டின் சுவர் இடிந்து பலி எண்ணிக்கை 3லிருந்து 13 ஆக அதிகரித்தது.   புயலால் இன்று நாகையில் 5, திருவாரூரில் 15, தஞ்சையில் 8, புதுக்கோட்டையில் 10 என இன்று வரை 38 பேர் பலியாகினர்.

இதனால் நேற்று 21 பேரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

.

மூலக்கதை