எம்.கே.என்.சாலை சந்திப்பில், 'சிக்னல்' அமைக்கப்படுமா?

தினமலர்  தினமலர்
எம்.கே.என்.சாலை சந்திப்பில், சிக்னல் அமைக்கப்படுமா?

ஆலந்துார்:போக்குவரத்து நிறைந்த, எம்.கே.என்.சாலை, தில்லை கங்கா நகர் சுரங்க பாலம் சந்திப்பில், சிக்னல், வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஆலந்துார், எம்.கே.என்.சாலையும், தில்லை கங்கா நகர் சுரங்கப் பாலம் சாலையையும் இணைக்கும், நான்கு முனை சந்திப்பைச் சுற்றிலும், நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், ஜி.எஸ்.டி., சாலை இணைப்பு ஆகியவை உள்ளன.
மடிப்பாக்கம், நங்கநல்லுார், ஆலந்துார், கீழ்க்கட்டளை, உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மணப்பாக்கம், போரூர், வடபழனி, பல்லாவரம், விமான நிலையம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
இச்சாலை சந்திப்பில், 'பீக்--ஹவர்ஸ்'சில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், வாகனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு செல்வது தான். அதிவேகமாக வரும் வாகனங்களால், அப்பகுதியில் தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பிட்ட சந்திப்பில் சிக்னல் அமைப்பதுடன், நான்கு சாலைகளும் சந்திக்கும் பகுதிகளில், வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மூலக்கதை