வடகொரியா மீண்டும் நடத்தியது பெரும் பேரழிவை ஏற்படுத்தும் அதிபயங்கர ஆயுதம் சோதனை : அமெரிக்காவுக்கு மிரட்டல்

தினகரன்  தினகரன்
வடகொரியா மீண்டும் நடத்தியது பெரும் பேரழிவை ஏற்படுத்தும் அதிபயங்கர ஆயுதம் சோதனை : அமெரிக்காவுக்கு மிரட்டல்

சியோல் : வடகொரியா அதி நவீன ஆயுத சோதனையை செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொருளாதார தடைகளை தளர்த்த மறுத்து வரும் அமெரிக்காவை மிரட்டவே, வடகொரியா இதை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதனால், அமெரிக்கா - வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவியது. கடந்த ஜூன் 12ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  அப்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு வடகொரியா  தலைவர் சம்மதம் தெரிவித்தார். இதனால், இருநாடுகளும் இடையே இருந்த மோதல் போக்கு தணிந்தது அணு ஆயுத சோதனைகளை கைவிட்டால், வடகொரியா மீதான பொருளாதார தடைகளை விலக்குவதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் மைக் பாம்பியோ வடகொரியா சென்று அதிபர் கிம்மையும் சந்தித்து பேசினார்.ஆனால், அமெரிக்கா உறுதி அளித்தது போல வடகொரியா மீது விதிக்கப்பட்ட தடைகள் ஏதும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட  கிம் ஜாங் உன், ‘அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திரும்பும்’ என எச்சரித்து இருந்தார்.  இந்நிலையில், வடகொரியா அதிநவீன போர் ஆயுதத்தை சோதனை செய்து பார்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல ஆண்டுகளாக ரகசியமாக தயாரிக்கப்பட்டு வந்த பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதம் சோதனை செய்யப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சோதனையை அதிபர் கிம் ேநரடியாக மேற்பார்வை செய்ததாகவும், சோதனை முழு வெற்றி அடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளன. . பொருளாதார தடைகளை தளர்த்த மறுத்து வரும் அமெரிக்காவை மிரட்டகவே வடகொரியா இதை செய்ததாக தெரிகிறது. அதன் செயலால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர்கடந்த அக்ேடாபர் 16ம் தேதி சீனாவில் இருந்து சட்ட விரோதமாக வடகொரியாவுக்குள் ஒருவர் நுழைந்தார். விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் ப்ரூஸ் பைரான் என்பதும், அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் அவரை காவலில் வைத்தனர். அவர் உளவு பார்க்க வந்திருக்கலாம் என வடகொரியா கருதுகிறது. இதனால், அவரை நாடு கடத்த முடிவு செய்துள்ளது.

மூலக்கதை