கலிபோர்னியா காட்டுத் தீயில் 600 பேர் மாயம்

தினகரன்  தினகரன்
கலிபோர்னியா காட்டுத் தீயில் 600 பேர் மாயம்

பாரடைஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பாரடைஸ் நகரில் கடந்த வாரம் பற்றிய காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தீயில் உடல் கருகி இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மோசமான காட்டுத்தீ காரணமாக 631 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை