தீபாவளி பண்டிகை செலவுகளுக்கு வங்கியில் இருந்து 50,000 கோடி ‘காலி’: கணக்கில் இருந்து அள்ளினர் வாடிக்கையாளர்கள்

தினகரன்  தினகரன்
தீபாவளி பண்டிகை செலவுகளுக்கு வங்கியில் இருந்து 50,000 கோடி ‘காலி’: கணக்கில் இருந்து அள்ளினர் வாடிக்கையாளர்கள்

மும்பை: தீபாவளி செலவுகளுக்காக வங்கிகளில் இருந்து ரூ. 50,000 கோடியை வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளனர்.  சமீப ஆண்டாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை பெருகி வருவதாக மத்திய அரசு  கூறினாலும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து செலவழிக்கும் ேபாக்கு சிலரிடம் தொடர்கிறது. அவர்கள்  எக்காரணம் கொண்டும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்வதில்லை என்று பிடிவாதமாக உள்ளனர். இவர்கள் அவ்வப்போது, தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து தான் செலவுகளை செய்கின்றனர். இப்படி வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் போதெல்லாம், வங்கி செயல்பாடுகள் சற்று மந்தமாகி விடும். உதாரணமாக, வங்கி கடன்களை தரும் நடவடிக்கைகள் சற்று தாமதிக்கும். வங்கி கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம்  எடுப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை ஒட்டி வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பணம் எடுத்தனர். தீபாவளி பண்டிகை வந்த வாரத்தில் மட்டும் 50,000 கோடி ரூபாய் பணத்தை  தங்கள் கணக்கில் இருந்து  எடுத்து ெகாண்டுள்ளனர்.  இதன்படி பார்த்தால், இந்தாண்டு கடந்த நவம்பர் 9 ம் தேதியுடன் முடிந்ததை வைத்து பார்த்தால், 20.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கணக்கில் இருந்தும், ஏடிஎம் மூலமும் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துள்ளனர். வழக்கமாக வாடிக்கையாளர்கள், இப்படி பெரிய அளவில் பண்டிகை தினங்களில் பணம் எடுத்தால், விழாக்காலம் முடிந்த வாரங்களில் அந்த பணத்தை விட  அதிகமாக வங்கிக்கு திரும்பி விடும். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி முடிந்த வாரத்தில் தான் அதிக அளவில் பணம் வங்கி கணக்கில் இருந்து  வாடிக்கையாளர்களால் எடுக்கப்பட்டது.  அப்போது மட்டும் 52,786 கோடி ரூபாய் பணம்  எடுக்கப்பட்டது. எனினும், அடுத்த 53 மாதங்களில் வங்கி கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது குறைந்தது. டிஜிட்டல் பணபரிவர்த்தனை பெருகி வரும் நிலையில், வங்கி மூலம் பணபரிவர்த்தனை செய்வதும் தொடர்கிறது. இதுபோல, ஏடிஎம்கள் மூலமும் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுப்பதும் அதிகரித்து வருகிறது.  இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில்  வங்கிகளுக்கும் தலைவலிதேர்தல் சமயத்தில், போட்டியிடும் கட்சி, வேட்பாளர்களுக்கு மட்டும் டென்ஷன் இல்லை; வங்கிகளுக்கும் கூடத்தான்.  வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். வங்கிகளில் இருந்து தான் அதிக அளவில் பணத்தை பலரும் அள்ளுவார்கள். மக்களின் கையில் பணம் தாராளமாக புழங்கும். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் ஒரு கூட்டத்தில் கூறியதாவது: 2014ம் ஆண்டு மக்களவை  தேர்தல் நடக்குமுன், 2013ம் ஆண்டு பல வங்கிகளிலும் பணம் குறைய ஆரம்பித்தது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பணத்தை கணக் கில் இருந்து எடுத்து கொண்டனர். தேர்தல் சமயத்தில் இப்படி பணம் வெளியே போகிறது  என்றால் எதற்கு என்று பலருக்கும் தெரிந்தது தான். மக்களிடம் அதிக அளவில் பணம் புழங்கும். இந்த பணம் திரும்பி வங்கிகளுக்கு வர சில மாதம்  ஆகும். இவ்வாறு நகைச்சுவையாக ரகுராம் ராஜன் கூறினார்.

மூலக்கதை