100 கோடி டெபாசிட் கார் நிறுவனத்துக்கு அதிரடி

தினகரன்  தினகரன்
100 கோடி டெபாசிட் கார் நிறுவனத்துக்கு அதிரடி

புதுடெல்லி: போக்ஸ்வேகன் டீசல் வாகனங்களில் பொருத்தியுள்ள சில சாதனங்கள் புகை தர வெளியீடு சட்ட விதிகளுக்கு புறம்பானது. அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது என பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்திருந்தார். விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி அமைத்து, போக்ஸ்வேகன் டீசல் வாகனங்கள் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் இழப்பீட்டை துல்லியமாக கணித்து அறிக்ைக தர  என்ஜிடி தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் உத்தரவிட்டு இருந்தார்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணைக்குப் பின், நீதிபதி கோயல் கூறுகையில், ‘‘கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்பட சில மோசடி சாதனங்கள் பொருத்தி, புகை வெளியீட்டு தர சான்று சோதனையில் இருந்து  டீசல் வாகனங்களை தப்பிக்கச் செய்த குற்றச்சாட்டில் போக்ஸ்வேகன் கார் நிறுவனம் இடைக்கால வைப்பு  நிதியாக 100 கோடியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும்’’, என உத்தரவிட்டார்.வாகனங்கள் வாபஸ்பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து இந்தியாவில் விற்பனை செய்துள்ள 3.23 லட்சம் வாகனங்கள் திரும்ப பெறப்படும் என போக்ஸ்வேகன் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அறிவித்து இருந்தது.

மூலக்கதை