இந்திய குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 2019 ஜனவரி 26-ல் இந்தியாவின் 70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இது தொடர்பாக இந்தியா விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் குடியரசு தின விழாவில் நடைபெற உள்ள ராணுவம் மற்றும் தளவாடங்களின் அணிவகுப்பை பார்வையிட உள்ளார்

காந்திய கொள்கைகள் மீது தீவிர ஈடுபாடு கொண்டவரான ரமபோசா, தென்னாப்ரிக்க முன்னாள் அதிபரான மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு நெருக்கமாக இருந்தவர் ஆவார்.

இவர் காந்தி நடை என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதத்தில், ஜோகன்ஸ்பர்க் நகரில் மக்களைத் திரட்டி பேரணி நடத்தினார். 2014 - 2018 வரை துணை அதிபராக இருந்த இவர், நிறவெறிக்கு எதிரான தீவிர செயற்பாட்டாளர் ஆவார்

மூலக்கதை